Wednesday, 5 April 2017

காஷ்மீரில் பாகிஸ்தான் சீருடை அணிந்து கிரிக்கெட்விளையாடிய இளைஞர்கள்



காஷ்மீர் மாநிலத்தின் உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்று பாகிஸ்தான் சீருடை அணிந்து விளையாடி உள்ளனர். மேலும் போட்டி ஆரம்பிக்கும் போது பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதத்தையும் பாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பாகிஸ்தானின் பச்சை சீருடை அணிந்திருந்த அந்த அணியின் பெயர் பாபா தர்யா உத் தின். இந்த பெயர் கண்டர்பாலில் அமைந்துள்ள புகழ்பெற்ற மசூதியின் துறவியின் பெயர். மற்றொரு அணி வெள்ளை சீருடை அணிந்து இருந்தது. இந்த மைதானமும் உள்ளூர் போலீஸ் நிலையம் அருகே இருந்ததுதான் சிறப்பு.

கண்டேர்பாலில் உள்ள வெயில் மைதானத்தில் ஏப்ரல் 2 ந்தேதி இந்த போட்டி நடந்து உள்ளது. அன்று ஷெனனி நஷ்ரி பிரிவினைவாதிகள் சுரங்க பாதையை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

நாங்கள் எங்கள் அணியை மிக வித்தியாசமாக காட்ட எண்ணினோம். மேலும் காஷ்மீர் பிரச்சினையை மறக்கவில்லை என்பதை மற்ற காஷ்மீரிகளுக்கு காட்ட விரும்பினோம். அதனாலேயே இந்த பொருத்தமான இந்த கவர்ச்சியான விஷயத்தை தேர்வு செய்தோம் என அந்த அணியினர் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...