Friday, 10 July 2020

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவனுக்கு 14 வயசு!

இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.. அந்த நேரத்தில் வெயிலும் அதிகமாக இருந்தது... அதனால் அவர் மேலும் பதட்டமானார்.. இதை பார்த்த சிலர், அவரை அங்கிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தற்போது கொரோனா பீதி உள்ளதால், உடனடியாக அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. தாயையும், மகனையும் ஒரு ரூமில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மறுநாள் அவருக்கு தொற்று உறுதியானது.. அதனால் உடனடியாக அவரை வேறு ரூமுக்கு மாற்றினர்.. ஜுலை 4-ம் தேதி, நிலைமை மோசமாகிவிட்டதால், பாவ்நகரில் உள்ள கோவிட் -19 மையத்திற்கு அனுப்பப்பட்டார். சிறுவன் மட்டும் தனியாகவே இருந்தான்.. அவனுக்கு தொற்று பற்றியும், அம்மாவின் நிலைமை பற்றியும் எதுவுமே புரியாமல் கலங்கி கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில், மாஸ்க் அணிந்த ஒருவர் சிறுவனிடம் வந்துள்ளார்.. வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார்.. தன்னை டாக்டர் என்று சிறுவனிடம் சொல்லிய அந்த மர்ம நபர், உனக்கும் கொரோனா இருக்கான்னு பார்க்கணும்.. என்று சொல்லி கொண்டே சிறுவனின் ஷர்ட் பட்டனை கழட்ட சொல்லி உள்ளார். அவனும் சட்டையை கழட்டி உள்ளான் உடனே அவன் கையை பிடித்து நாடி பார்த்துள்ளார்... பிறகு, அவனை தரையில் படுக்க வைத்து, தன் அருவருப்பான செயலை காட்டி உள்ளார்.. உடம்பெல்லாம் கைகளால் தொட்டு, என்னென்னமோ செய்வதை பார்த்து பயந்துபோன சிறுவன், அலறி அடித்து கொண்டு எழுந்து ஓடினான்.. அங்கிருந்தவர்களிடம் இதை பற்றி சொல்லி கதறினான்.. இதனால் போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை விசாரித்தனர்.. அவர் டாக்டரே இல்லை என்றும், சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியது உண்மைதான் என்பதும் தெரியவந்தது. உடனடியாக எப்ஐஆர் பதியப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...