Friday, 24 March 2017

தமிழ் இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பரபரப்பு.


‘‘பட வாய்ப்பு தருவதற்கு தமிழ் பட டைரக்டர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்’’ என்று நடிகை லேகா வாஷிங்டன் புகார் கூறியுள்ளார்.

செக்ஸ் தொல்லை
திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார்கள் கிளம்பி உள்ளன. பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் பல நடிகைகள் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு உள்ளனர்.
தற்போது நடிகை லேகா வாஷிங்டனும் தன்னை தமிழ் பட டைரக்டர் ஒருவர் படுக்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.
இவர் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் வினய் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். காதலர் தினம், உன்னாலே உன்னாலே, வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
லேகா வாஷிங்டன் செக்ஸ் தொல்லை குறித்து அளித்த பேட்டி வருமாறு:–


தமிழ் பட டைரக்டர்
‘‘சினிமாவில் நடிகையாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது.
தமிழ் பட டைரக்டர் ஒருவர் என்னை அவரது காரில் அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவாய் என்று கேட்டார்.
அந்த இயக்குனர் கேட்டது புரியாதது போல் நான் நடித்தேன். ஆனாலும் அவர் விடவில்லை. திரும்ப திரும்ப நீ என்ன தருவாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்தது. உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீர்கள் என்று அவரிடம் சொல்லி விட்டேன்.
படுக்கை
படுக்கைக்கு வர மாட்டேன் என்று நான் சொன்னதும் அவர் அதிர்ச்சியானார். மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்தினார். நான் முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டேன். இதனால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி விட்டார்’’.
இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார்.

No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...