Friday, 24 March 2017

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா?

எந்தச் சூழ்நிலையிலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.


கன்னியாகுமரியில் தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற அவர், வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியது:


கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா மட்டுமே மக்களின் பொழுதுபோக்கு சாதனமாக இருந்ததால், திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் சென்றனர். தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் தற்போது செல்லிடப்பேசி, இணையம், முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு மரியாதையும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், இன்றைக்கு சினிமா வெளியாகும் அன்றே திருட்டு சி.டி. வெளியாகி விடுகிறது. இதனால் இன்றைய தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.


சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட வேண்டுமென்பது எனது விருப்பம். தேர்தலில் நிற்பவர்கள் ஒரு சங்கத்தில் மட்டுமே பொறுப்பாளர்களாக இருப்பது நல்லது. இரு சங்கங்களில் பொறுப்பாளர்களாக இருப்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மீது அதிகமான ஆர்வம் இருந்தது. அப்போது நிறைய பேர், அரசியல் ஒரு சாக்கடை என்றனர். அந்த சாக்கடையை நாம் ஏன் சுத்தம் செய்யக் கூடாது என்று அவர்களிடம் வாதிட்டேன். எனது மகன் விஜய் அரசியலுக்கு வருவது மூலம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நான் நினைத்ததும் உண்மைதான். காலப்போக்கில் அரசியல் ஒரு சாக்கடைதான ், அதனை சுத்தம் செய்ய இயலாது என்பதை உணர்ந்து அதிலிருந்து ஒதுங்கி விட்டார்.

No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...