Saturday, 25 March 2017

படுக்கைக்கு வராட்டா சீரியலில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டினார்: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்.


பிரபல தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா ஷிண்டே.பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ஷில்பா ஷிண்டே. அந்த தொடரை சஞ்சய் கோஹ்லி என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து தயாரித்து வருகிறார்.இந்நிலையில் சஞ்சய் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா. இது குறித்து ஷில்பா கூறுகையில்,

சஞ்சய் ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சய் என்னிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை. என்னை அடிக்கடி செக்ஸி என்று அழைத்தார். மேலும் ஏதாவது காரணம் சொல்லி என் மீது கை வைத்தார்.


மிரட்டல் :
தன்னுடன் படுக்கைக்கு வராவிட்டால் தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிடுவேன் என்று சஞ்சய் என்னை மிரட்டினார். இது குறித்து நான் சக நடிகையிடம் கூறியதற்கு அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.



தொல்லை :
சஞ்சய் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒருமுறை மேக்கப்மேன் பிங்கு பட்வா பார்த்தார். இதையடுத்து மறுநாளே பிங்குவை வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.

மனஅழுத்தம்
 கடந்தமனஅழுத்தம் கடந்த ஆண்டு மனஅழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டேன். அதை தாங்க முடியாமல் தான் தற்போது வெளியே கூறுகிறேன். இந்த துறையில் இது போன்ற பாலியல் தொல்லை குறித்து பேச நடிகைகள் பயப்படுகிறார்கள்.


நீக்கம் சஞ்சய் கோஹ்லியின் ஆசைக்கு இணங்க மறுத்ததை அடுத்து என்னை தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிட்டார். இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால் போலீஸ்காரர் மகேஷ் பாட்டில் நான் கூறுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார் என்றார் ஷில்பா


No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...