Saturday, 25 March 2017

எறும்பு கடியில் ஹீரோயின் மயக்கம்

மைசூர் காட்டுபபகுதியில் ‘மதிப்பெண்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது முட்புதருக்குள் தவறி விழுந்தார் ஹீரோயின். இதுபற்றி பட இயக்குனர் கே.கிருஷ்ணமூர்த்தி கூறியது: தாயின் சபதத்தை நிறைவேற்ற கலெக்டர் படிப்பு படிக்க சென்னை வரும் ஹீரோவுக்கு ஒரு பெண் உதவுகிறார். கலெக்டராக பட்டம்பெற்ற பின் மைசூரில் பணிக்கு செல்கிறான். அங்கு ஒரு ஆபத்தில் சிக்குகிறான். அதிலிருந்து மீள முடிகிறதா என்பது கிளைமாக்ஸ். இதில் ஸ்ரீஜித் ஹீரோ. நேகா, அமிர்தா ஹீரோயின்கள். குமரன் ஜி.ஒளிப்பதிவு. ஷாம் சி.எஸ் இசை. கதை, வசனம் பாடல் எழுதி தயாரிக்கிறார் இரா.சோதிவாணன்.

மைசூர் சாமுண்டி காட்டுப்பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. வெடி குண்டு வீசும் காட்சியில் படப்பிடிப்பிலிருந்த அமிர்தா பயத்தில் அருகிலிருந்த முட்புதருக்குள் தவறி விழுந்தார். அவரது உடலில் பல இடங்களில் முள் குத்தி கிழித்ததுடன் காட்டு எறும்புகள் கடித்ததில் அமிர்தாவுக்கு மயக்கம் வந்தது. கிராம வைத்தியர் வந்து அமிர்தா உடல் முழுவதும் பச்சிலை மருந்தை தடவி விட்டார். படப்பிடிப்பில் இது அதிர்ச்சி சம்பவமாகி விட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகே அமிர்தா சகஜநிலைக்கு வந்தார். இவ்வாறு இயக்குனர் கூறினார்.

No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...