Saturday, 25 March 2017

டெல்லியில் பரபரப்பு மரத்தில் ஏறி போராடிய நம் விவசாயிகள்.. கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய விஷால்...


மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டார் விஷால்.
விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ரமேஷ் மற்றும் அகிலன் ஆகியோர் இன்று மதியம் திடீரென மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர்.

அப்போது அங்கு நடிகர் விஷால், இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பதற்றமடைந்த விஷால், கையெடுத்து கும்பிட்டு இளைஞர்களை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார். போராட்டமே கெட்டுவிடும், தயவு செய்து கீழே இறங்குங்கள், ரெண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்றெல்லாம் விஷால் கூறினார்.
சுமார் 10 நிமிட நேரம் கெஞ்சிய பிறகு இரு இளைஞர்களும் கீழே இறங்கினர். அப்போதுதான் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அவர்களை திருப்பியனுப்பினர் விவசாயிகள்

அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே இறங்கிய இளைஞர்களை விஷாலும் பிறரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.

No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...